search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரில் மூழ்கி பலி"

    • 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருங்கல்:

    புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. கல்குவாரியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    அந்த பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது சென்று குளித்து வந்தனர். பனங்காலைமுக்கு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (38). இருவரும் நேற்று மாலை கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள்.

    இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன், ராஜேஷ் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இரவு இருள் சூழ்ந்து விட்டதையடுத்து தேடும்பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன், ராஜேஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்குவாரியில் குளிக்க சென்ற இடத்தில் நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரி பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது . இங்கு 100 மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக நாகராஜ், சமையலராக மெணசியை சேர்ந்த சிலம்பரசன், வாட்சமேனாக தங்கவேல் ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முதல் 3 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சுமார் 20 மாணவர்கள் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

    இதில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார், (19) முதலாம் ஆண்டு இயற்பியல் படிக்கும் பூபதி, (17) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம்குமார் உயிருக்கு போராடியுள்ளார். அவரை பூபதி காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போகவே, கூச்சலிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், போலீசாரும் அணையில் இருந்து சடலமாக பிரேம்கு மாரை மீட்டனர். புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜோவர் கால்வாயில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரடு பரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோவர் (வயது39). அவரது சகோதரரின் மகனான 10-ம் வகுப்பு மாணவன் முகம்மது நபன் (15). இவர்கள் இருவரும் சாலியாறு பகுதியில் உள்ள மணக்கடவு கால்வாய்க்கு நேற்று சென்றனர். அப்போது இருவரும் அடுத்தடுத்து நீரோட்டத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதி பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் மூழ்கிக்கிடந்த மாணவன் நபன் முதலில் மீட்கப்பட்டான். அவன் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அதற்கு முன்னதாகவே பரிதாபமாக இறந்துவிட்டான்.

    மேலும் ஜோவர் கால்வாயில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இருவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கோழிக்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பாண்டிச்சேரி, பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 54). கட்டிட தொழிலாளி. இவர் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரி கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார். இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
    • கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.

    வல்லம்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது முகமது கனி என்பவரின் மகன் அப்துல் ரசாக் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அப்துல் ரசாக் அவருடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சை அருகே உள்ள குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை அப்துல் ரசாக் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து குளிப்பதற்கு கிணற்றின் மேல் இருந்து கிணற்றுக்குள் குதித்து உள்ளனர்.

    அவர்களுடன் வந்த மற்றொரு நண்பர் கிணற்றில் குதிக்காமல் மேலே நின்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.

    இதில் அவர் மூச்சு திணறி கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவருடைய குளித்த மற்றொரு நண்பர் உயிர் தப்பினார்.

    இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இருந்து கல்லூரி மாணவர் அப்துல் ரசாகின் உடலை மீட்டனர்.

    பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி வல்லம் போலீஸார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பலியான அப்துல் ரசாக்கின் தந்தை சையது முகமது கனி (வயது 48) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குளித்து கொண்டிருந்த சதீஸ்குமார் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதீஸ்குமார். எலக்ட்ரீசியன். இவர் திருவிழாவுக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு வந்தார். அப்போது உறவினர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு சென்றார். அங்கு ஊட்டமலை பரிசல் நிலையம் அருகே குளித்து கொண்டிருந்த சதீஸ்குமார் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் அறிந்து உடனே அங்கு விரைந்து சென்று சதீஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகவல்லி. இவர்களது 3 வயது மகள் நிரஞ்சனா.

    இந்நிலையில் திருத்தணியை அடுத்த புஜ்ஜி ரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ரமேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றார்.

    அங்கு சிறுமி நிரஞ்சனா விளையாடிக்கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து சிறுமி நிரஞ்சனாவை பெற்றோர் தேடியபோது அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த உறவினர்கள் சோகமானார்கள்.

    இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.
    • தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களது மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது6), சித்திக் வைபவ். சஸ்வின் வைபவ் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் சஸ்வின் வைபவ் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தாரிகா தனது மகன்கள் சஸ்வின் வைபவ், சித்விக் வைபவ் ஆகிய 2 பேரையும் நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றார்.

    சிறுவன் சஸ்வின் வை பவ் நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக் வைபவுக்கு உணவு கொடுக்க நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார்.

    அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் யாரும் கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் தாரிகா திரும்பி வந்தபோது மகன் சஸ்வின் வைபவ் மாயமாகி இருந்தான். அவனை தேடிய போது நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவனது உடலைபார்த்து தாரிகா அலறி துடித்தார்.

    இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர்.
    • கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள மண்மலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் மதீஷ்(வயது17). இவர் முருங்கைபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.

    சம்பவத்தன்று மாணவர் மதீஷ் தனது உறவினர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றார். இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அவர் நீச்சல் பழகினார். அப்போது எதிர்பாராத விதமாக இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதனால் மதீஷ் நீரில் மூழ்கினான். அருகில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து மதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்கான ஆத்தூர் அரசு ஆச்பத்திரிக்கு அனுப்பி வைக்கபப்ட்டது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார்.
    • போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை, தேசிங்கு நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம் கடலில் மூழ்கி பலியானார். இன்று காலை அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. காசிேமடு மீன்பிடிதுறைமுக போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×